Saturday, 19 February 2011

நல்லா வருவாப்ல .....தல எப்போதும் தல தான் அவர் மாறி ஒரு படைப்பாளிய நான், இந்த உலகம் 
பாத்திருக்காது அவர் ஒரு உலக நாயகன் இப்டி etc etc எல்லாருக்கும் தெரிஞ்ச கத   தான் 


நான் பாத்த கமல் வேற ,

6 வது படிக்கறப்போ சனி நாயிறு படம் போடறப்போ எல்லாம் எங்க வீட்ல தான் 
டி வீ  பாக்க வருவாங்க ஏன்னா அந்த கிராமத்துல எங்க வீட்ல தான் வாங்கினாங்க அப்போ வாழ்வே மாயம் பாத்தப்போ அவர் நடிப்புல அசந்தேன் 
என்னவோ நானே நடிச்ச மாறி இருமி அழுது  பில்டப்பு குடுப்பேன் 


முதல் காரணம் எங்க அண்ணன் தான் அப்டியே கமல் மாறியே இருப்பார் 
வீட்ல கூட கமல் மாறியே நடிச்சு பாப்பேன் கண்ணாடி முன்னாடி நின்னு
என்ன கொடும


அப்புறம் படிப்படியா முழுசா கமல் ரசிகனாவே ஆகிட்டேன் 12 வது 
ல ஆளவந்தான் ரிலீசு பசங்க எல்லாம் படத்துக்கு கூட்டிட்டு போக சொளிடானுங்க கை ல கால் காசு இல்ல 
அப்போ புக் குடுத்தாங்க புதுசா அப்டியே வந்த விலைக்கு வித்து 
என் கேர்ள் பிரெண்ட் கிட்ட கொஞ்சம் வாங்கி அப்டி இப்டி தேத்தி 
கூப்டு போயி பாத்தா ........மனிஷா வந்து குனிஞ்சா நம்ம பய ஒருத்தன் எட்டி பாத்தான் .......பக்கதுல ஒருத்தன் டேய் எப்டி பாத்தாலு அவ்ளோ தான் தெரியும் மூடிட்டு சேர் ல உக்காருன்னான் .....
(ஹி ஹி அந்த நம்ம பய நான் தான் )

இண்டர்வெல்ல ஐஸ் கிரீம் வேற அழுதேன் ......

படம் முடிஞ்சி நல்ல இருந்திச்சா நு கேட்டேன் 
ம்ம்ம்ம்  ஐஸ் கிரீம்  சூப்பர் நு வாய தொடச்சாணுக வக்கனையா அப்புறம் பஞ்ச தந்திரம் கு ஜெயம்கொண்டம்  தியேட்டர் ல நான் மட்டும் தான் சிரிச்சேன்(எவனுக்கும் புரில ) .....எல்லாம் என ஒரு மாறி பாதானுங்க 
அது வேற நம்ம ஊராச்சா.... வீட்ல போட்டு குடுப்பாணுக  நு சிரிப்பு வந்தாலும் 
அடக்கிகிட்டேன் கிரகம் 

பம்மல் கே சம்பந்தம் படத்த பஸ் ல தான் பாத்தேன் திடீர்னு ஒருத்தர் பக்கதுல வந்து தம்பி அங்கதான் படம் ஓடுதில்ல அப்புறம் ஏன் நீயும் படம் ஓட்டுற நு
சொல்லி ஆப் பண்ணிட்டாரு... சத்தமா சிரிச்சது தப்பா பாவி உலகம் (நேரம் இரவு : 2 மணி )

அப்புறம் விருமாண்டி இபோ நெனச்சா கூட புல்லரிக்குது அதுல முழு கமல பாத்தேன் அந்த மாறி கிறதா மீச வைக்கணும் நு ஆச 
உடனே வெச்சிகிட்டேன் பென்சில்ல (ஆத்தி எல்லாம் தெரியும் நா எனக்கு இபோ அரிக்குது எங்கனு சொலு பாப்பும் )

அன்பே சிவம் சீரியசா பாதிடுருக்கேன்
 பக்கதுல என் மச்சான் கிட்ட கேட்டேன்  பார்ரா எப்டி இருக்கு இந்த குடை பைட்டு நு 
மச்சி தூங்கும் பொது டிச்டுர்ப் பண்ணாத நு சொல்லி கொட்டாவி விட்டான் 
அப்டியே வாயில கொல்லிகட்டய சொருகலாம் நு தோணிச்சி 


வசூல் ராஜா பாத்தப்போ கட்டிபுடி வைத்தியத்துக்கு பக்கத்துக்கு  சீட் புள்ளைய கூப்டேன் வெயிட் எ நிமிட் பார் பைவ் மினிட் நு சொல்லி ஆள கூட்டி வந்துச்சு 
தியேட்டர் ல நெஞ்சால யே நகர்ந்தேன் 

ஹாஸ்டல் ல கமல் ரசிகர் மன்ற தலிவர் போஸ்ட நான் தான் ஜெயிச்சேன் 
போட்டி போட்டது நான் மட்டும் தான் .....

அப்புறமா தசாவதாரம் படம் பாத்து வந்து நல்ல இருக்கா நு கேட்டேன் அதுக்கு 
ம்ம்ம்ம் ம்ஹும் அப்டினுட்டு..... நான் யாரு!  .. ஹூ ஆம் ஐ !..நு சொன்னானுக  


இப்போ தான் விஜய் டி வீ   அது இதுன்னு விளம்பரம் லாம்

இபோதான்  கமல் யாருன்னே மக்களுக்கு தெரியிது 
அப்போல்லாம் கமல் ரசிகன்னு சொன்னாலே பச்சை மிளகா ஜுசு குடிசாப்ள 
நம்மள   லுக்கு விடுவானுக இபோ அவனே வந்து கமல் ஒரு ஜீனியஸ் நு சொல்வான் என்னமோ இவன் சொல்லி தான்
 ஆச்கர்ல அவார்டு குடுக்கற மாறி ..................
இபோதாங்க நம்ம காதல் மன்னன் பச்சை மண்ணு இன்னும் நிறைய இருக்கு அவர் கூட ட்ராவல்   பண்ண........
 என்கிட்ட டிக்கெட் இருக்கு உங்க கிட்ட...?

                                                      ......ஜெயங்கொண்டான்   

Tuesday, 15 February 2011

ஜெயம்கொண்டம்


கல்லூரியில் கம்ப்யூட்டர் ப்ராக்டிகல்ஸ் முடிஞ்சி viva கு மேடம் கேள்வி கேட்டாங்க உங்க ஊர்ல என்ன ஸ்பெஷல் நு 
அப்டி ஒன்னும் சொல்லிக்கிற அளவுக்கு இல்லையே நு நெனைச்சி 
க்ரைம் தன் மேடம் நு சொன்னேன் 


அப்டி என்ன க்ரைம் பண்ணுவாங்க -மேடம் 
கொலை ,கொள்ளை ,வழிப்பறி ,இப்டி எல்லாம் இருக்கு மேடம் கற்பழிப்பும் சேத்து-நான் 
ஓகே viva முடிஞ்சுது நீங்க போலாம் சீக்கிரம்.....
 அந்த viva ல நான் 2 வது மார்க் லாஸ்டுலேருந்து 


போய் சேந்த பஸ்டு நாள் P.D சார் வந்து யார்யாருக்கு என்ன விளையாட தெரியும் நு கேட்டார் 
எல்லாரும்  சொன்னாங்க நானும் சொன்னேன் கிரிக்கெட் ,கேரம் ,செஸ் ,டென்னிஸ் ,புட்பால் ,வாலிபால் ,ஹாக்கி நு 

உன்ன என்ன கேம்ஸ்  தெரியும் நு கேக்கல என்ன விளையாட தெரியும் நு கேட்டோம் -சார் 
இபோ சொன்ன எல்லாமே விளையாடுவேன் சார் -நான் 
நீ எந்த ஊர் -சார்
ஜெயம்கொண்டம் -நான் 

நீ அப்டி தான் இருப்பே உக்கார் நு சொல்லிட்டார் .....


ஒரு வாரத்துல சினிமாக்கு போனோம் நைட்டு லேட் ஆயிடுச்சி போலீஸ் காரன் கூபிட்டு எல்லா ஊரையும் கேட்டார் 
நான்    ஜெயம்கொண்டம் நு சொன்னதும் நீ மட்டும் வான்னு

என் அட்ரச கேட்டு நீ என்ன நக்சலைட்டா நு கேட்டு ஐ டி கார்ட புடுங்கிட்டார் 
அப்புறம் கால்ல விழுந்து வாங்கிட்டு வந்தோம் எல்லாரும் சேந்து 

இப்டி பல புகழ்களுக்கு சொந்தக்கார ஊர் தான் ஜெயம்கொண்டம்

எங்க ஊருக்கு இப்டி ஒரு ஆண்டி ஹீரோ ரோல் இருந்தாலும் 


பல சூப்பர் ஹீரோ ரோல் லாம் வெச்சிருக்கு எங்க ஊர் 
ஏற்கனவே இருக்கற வீட்ல குடி போறது ரொம்ப ஈசி 
நிலம் வாங்கி கஷ்டப்பட்டு நாமே செங்கல் செஞ்சி 
கட்டி குடிபோற சுகம் தனி 


அது போலதான் ரொம்ப பின் தங்கிய மாவட்டத்திலிருந்து 
(பாலைவனத்துல ஒரு நீரூற்றை போல )
ஒரு பெயர் சொல்ற அளவுக்கு வந்திருக்கு 


நிறைய படிச்சிருக்கற அதே போல பண்பாடும் மாறாத இளைஞர்கள் 
அதி காலையிலே கடமை செய்யும் குடும்ப விளக்குகள்
உள்ளதை கொடுத்து சந்தோஷப்படும் பணக்காரர்கள்  
இப்டி நிறைய .............
(கொஞ்சம் பக்கத்துல  கங்கை கொண்ட சோழபுரம் ,
அதிக நிலக்கரி இருக்கும் சிட்டி ,
தமிழ்நாட்லயே கரெக்டா தமிழ் பேசுற இடம் ) ..........


.........இதாங்க எங்க ஊரு(சோழர்களின் சொர்க்கம் ) .....
gangai gonda cholapuram temple