Tuesday, 22 March 2011

சோனியா ஜி ....மன்மோகன் ஜி .... 3 ஜி..... அடச்சீ ......


அரசியல் - இதற்கும் எனக்கும் ஒரு பந்தமும் கிடையாது என்று இன்று வரை நினைத்திருந்த எனக்கு ....
கொஞ்சமாய் புரிந்திருக்கிறது என் வாக்கின் இன்றியமையாமை ...
தேர்தல் தினம் விடுமுறை கிடைக்கும் ...அப்படியே நட்பு  வட்டாரங்களை சந்தித்து விட்டும் வரலாம் என நினைக்கும் நான் 
இன்று தமிழக ஆட்சியின் ஆளுமை யாராகபோகிரார்கள் என எதிர்பார்ப்பும் அக்கறையும் இருக்க காரணங்கள் ஆயிரம்........!
 அது என்னோடு போகட்டும் 


பந்தயத்தில் தனக்கு வேண்டிய நபர் முதலில் வரவேண்டும் என பணம் கட்டும் சுவாரசியத்தை விட 
இவரை வர விடமாட்டேன் என சூளுரைக்கும் நபரையும் எவ்வாறு அதை நடத்தப் போகிறார் என்ற சுவாரசியம் பெரிதே.. 

அந்த வகையில் நான் சொல்லபோவது சீமானை பற்றியே தான் 
அவர் நேற்று முளைத்த காளானா இல்லை 
ஒரு துளி நீருக்காக காத்திருந்து பொருத்தது போதும் என வெகுண்டெழுந்த பெரு மர  விதையா ...
-இந்த தேர்தலில் நான் காங்கிரசை விடப்போவதில்லை அவர்களை வேரோடு அழிப்பது  தான் என் நோக்கம்
என் தமிழ் மக்களை அழிக்க துணை புரிந்த காங்கிரசார்கள் நம் தமிழ் நாட்டில் தலையெடுக்க கூடாது என 
சினம் கொண்டு பேசியிருக்கிறார் .....
காங்கிரசை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஒட்டு போடுங்கள் என கேட்கிறார் 
இதற்க்கேன்றே அவரது இயக்கத்தை கட்சியாகவும்  மாற்றியுள்ளார் 


இந்தியன் என்ற உணர்வை விட நான் தமிழன் எனும் கர்வம் தமிழனுக்கு இருக்கவே செய்கிறது அது மட்டுமில்லாமல் அப்பாவி தமிழர்களை கொன்று போட்ட 
அந்த கொடும் சிங்கள வெறியர்களை நினைத்தால் தமிழ் பால் குடித்த ஒவ்வொரு  தமிழனுக்கும் ரத்தம் சூடாகும் என்பதில் ஐயமில்லை  
ஆனால் சாமான்ய மனிதனால் முடியாது என்ற நிலையிலிருக்கிறோம் அக்கணம் வீருகொண்டவர் சீமான் என்பதில் நமக்கு பெருமையே .........


 தமிழுக்கு ,தமிழ் மக்களுக்கு,திராவிடனுக்கு நான் அடிமை என்ற கலைஞரின் தமிழார்வத்துக்கு ,பேச்சுக்கு நானும் அடிமையே 
ஆனால் ஒரு தமிழனுக்காக (பெருந்தலைவர் காமராஜர்) இந்திரா காந்தியையே மிரட்டிய பெருந்தமிழாசான்  தன் சுய விருப்பு வெறுப்புக்காக தமிழினங்களை 
பலிகொடுத்த பின் ......அவர் மீதுள்ள பற்று பறந்தது 

பல அரசியல் சூழ்ச்சி  , பழிக்குப்பழி ,பேராசை போன்ற காரணங்கள் இந்த நிகழ்வுக்குப்பின் இருக்க 
அந்த கொடூரம் புரையோடிய புண்ணாகவே இருக்கிறது ....

புண்ணுக்கு மேல் மருந்தாய் சீமானின் பேச்சு இளைஞர்களை ஈர்த்தது பெரும் பட்டாளத்தை (இளைஞர்கள்) தனது அஸ்திரமாக கொண்டுள்ள இவர் 
வைகோ ,திருமா இவர்களுக்கு பிறகு தீப்பறக்கும் பேச்சை அடையாளமாய் கொண்டுள்ளார் ஹிட்லரின் சாயலை இவர் பேச்சிலே காண்கிறேன் 
ஏதாவது செய்து தமிழ் மலர்ச்சி கிடைத்தாக வேண்டும் என்ற தேடல் அவரது கண்களில் தெரிகிறது 
முயற்சி செய்தால் வல்லூரையும் வெறுங்கையால் வெட்டலாம் என்ற தன்னம்பிக்கை 
இப்படி பல எனை ஈர்க்கவே செய்கிறது. ஆனால் .....

பின்வரும் கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும் என்றாலும் ......
விடையின் வினோதம் அறிய ஆவல் ...... • இவர் எந்த வகையில் காலகாலமாய் சாதுர்யமாக ஆட்சி  செய்து வரும் கலைஞரையும்  அவரது தோழமை கட்சிகளையும் எதிர்க்க போகிறார் ?


 • விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போதும் இவ்வித எதிர்பார்ப்புகள் இருந்தன நான் தனிக்காட்டு ராஜா, இன்னொரு கருப்பு M.G.R ,கூட்டணி அமைக்க மாட்டேன் என்று கூறினார்  ஆனால் தற்போது அவர் எல்லா அரசியல்வாதிகள் போல கூட்டணி என்று சகிதம் ஆகியுள்ளார் இவரும் அவரை போலே போக மாட்டார் என என்ன நிச்சயம் ?


 • இவர் ஒருவர் மட்டும் தமிழனத்தை , தமிழீழத்தை எவ்வாறு மீட்டுவிட முடியும் ......?


 • தமிழீழ விடுதலை என்ற சில நோக்கங்களே இவரது எதிர்கால அரசியலுக்கு போதுமா ......?

                                       .....ஜெயங்கொண்டான் வருவான் 

10 comments:

 1. நன்றி மச்சா எல்லாம் உன் செயல் ....சீமானை பற்றிய உன் கருத்து என்னவோ ...?

  ReplyDelete
 2. நன்றாக இருக்கிறது சகோதரம்... மன்னிக்கணும் கொஞ்ச நாளாக அரசியல் சம்பந்தமாக கதைப்பதை நிறுத்தியிருக்கிறேன் அனால் விரைவில் பதில் தருவேன்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
  இனி வரும் பொழுதகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

  ReplyDelete
 3. நன்றி ....என்ன வருத்தம் தங்களுக்கு அதன் தாக்கம் தங்கள் பதிவிலும் தெரிகிறதே .....

  ReplyDelete
 4. நன்றி ....என்ன வருத்தம் தங்களுக்கு அதன் தாக்கம் தங்கள் பதிவிலும் தெரிகிறதே .....

  ReplyDelete
 5. ....சீமானை பற்றிய உன் கருத்து என்னவோ ...?//


  அரசியல் குள்ளநரிகளிடம் மாடிக் கொண்டு முழிக்கும், நல்லது செய்ய துடிக்கும் ஒரு சாமானியன்...

  ReplyDelete
 6. காலம் காலமாக ஒரு நல்ல தலைவரை எதிர்பார்த்து தமிழ் இனம் காத்திருக்கிறது ...........
  அது ஹிட்லராகவே இருந்தாலும் பரவாஇல்லை . ......
  சீமானும் தேர்தல் அரசியலில் இறங்கியது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது .......
  களத்தில் கர்ஜித்த சிங்கங்கள் எல்லாம் ஒரு சில சீட்டுக்காக சிங்கி அடித்த கதைகள் எல்லாம் ஏராளம் நாம் பார்த்துவிட்டோம் ..
  அதுதான் தேர்தல் அரசியலின் மாயாஜாலம் .............

  ReplyDelete
 7. dakkalti ...அரசியல் குள்ளநரிகளிடம் மாடிக் கொண்டு முழிக்கும், நல்லது செய்ய துடிக்கும் ஒரு சாமானியன்...


  எல்லா பெரும் தலைவர்களும் இவரை போன்றே சாமான்யர்கள் தான் அரசியலுக்கு வருவதற்கு முன் நன்னோக்கங்களுடன் வரும் அவர்கள் அரசியலுக்கு வந்த பின் தடம் மாறுவது ஏனோ ...இவர் மாறாமல் இருந்தால் சரி .....

  ReplyDelete
 8. அஞ்சா சிங்கம் ...said...
  சீமானும் தேர்தல் அரசியலில் இறங்கியது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது .......


  அஞ்சா சிங்கம் ...
  உங்களை போலே தான் நானும் ....சீமான் அரசியலுக்கு வருவதை விரும்பாதவன் ...ஏனனில் அரசியல் களம் குதிக்காமலே தான் நினைத்ததை சாதித்த உன்னதமானோர் பலர் உளர் .....ஆனால் தற்போதய நிலையில் அரசியல் எனும் ஊடகம் இன்றியமையாததாகிறது ......

  கால காலமாய் வேர்களை அடி ஆழம் வரை பதித்த அழுக்கு அரசியல் மரத்தை வெட்ட ஒரு மனிதன் தயார் அவன் எதிர்பார்ப்பது கூறிய கோடாரிக்காக.....

  ......................................ஜெயங்கொண்டான்

  ReplyDelete

எப்பு...டி ...