Thursday 10 March 2011

நான் ரசிச்ச ஹாலிவுட் ஹீரோ

னக்கு ஹாலிவுட்  படம்னா  உயிர் எல்லா ஹாலிவுட் ஆக்டர் ஆக்ட்ரஸ்  யும் தெரியும் அதுக்குன்னே காலேஜ்ல ஒரு தனி சூட் கேஸ் ல சி டி  சேத்து வெச்சேன் ..
எனக்கு இந்தியன் ஆக்டர் லாம் பிடிக்கவே பிடிக்காது உவ்வே .....டிராமா போட்டாலும் டான்சு ஆடுனாலும் ஹாலிவுட் ஸ்டெயிலு தான் ...எப்போவும்  ஹாலிவுட் சாங்க்ஸ் தான் என் காதுல முனுமுனுத்துட்டே  இருக்கும், 

எப்போ ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆனாலும் பத்து பேர கூப்டு போய்டுவேன் , 
அகில இந்திய ஹாலிவுட் ரசிகர் மன்றத்துக்கு நான் தான் துணை செயலாளர் ,இதுக்குன்னே ஒரு நாளைக்கு தவுசட்ன் ருபீஸ் செலவு பண்ணுவேன் .......இப்பிடில்லாம்   பில்டப்பு குடுக்கனும்னு நெனச்சாலே செலவு பண்ணி சூனியம் வேப்பீங்கனு தெரியும் ....!




காலேஜ் படிக்கும்போது ரூம் ல desperado படம் பாத்தேன் எப்பா என்ன லுக்கு என்ன ஸ்டைலு அவர்தாங்க நான் ரசிச்ச முதல் ஹாலிவுட் ஹீரோ ,,,ஆண்டனியோ பண்டராஸ் ...இப்போவும் பேவரிட்  படம் வரிசையில desperado வும் இருக்கு 

அந்த படத்துல கிடாரிஸ்ட் ஆ வருவாரு ஒபெநிங் சீன்ல கிடார் வாசிச்சுக்கிட்டே ஒருத்தன அடிப்பார் 
அந்த கிடார் ல இருக்க ரத்தத்த தொடைச்சிட்டு மறுபடியும் வாசிப்பார் அந்த சீன்ல மயங்கினவன் தான் டாக்டர் நானு .......இப்போ  அவர பத்தி சொல்லணுமுன்னா ....


வர் நடிக்க வரலேன்னா இன்னொரு ரொனால்டோ வா ஆகிருப்பார் ஆமாங்க செமையான புட் பால் பிளேயர் 14  வயசுல கால்ல அடிபட்டு முறிஞ்சி அவர் கனவு கலைஞ்சிடுச்சி   அப்புறமா சினிமா பக்கம் வந்தாப்ல .... 

அவரு அப்பா போலீஸ் . இவர் 1960 இல் ஆகத்து பத்தாம் தேதி ஸ்பெயின் நாட்டிலே பிறந்தார் 

 சின்ன சின்ன வேஷத்துல நாடகத்துல நடிச்சு  அப்புறமா படிப்படியா தியேட்டர்,தெரு நாடகங்கள்ல  நடிச்சிகிட்டு இருந்தார் தெறம இருக்கவனுக்கு விளம்பரம் தேவையில்ல ....அந்த மாறி இவரு முகபாவனை,நடிப்பை பாத்து இவர ஸ்பெயின் லையே நடிக்க அழைப்பு வந்தது முதல் படம் “Laberinto de Pasiones” (“Labyrinth of Passion”) (1982) 

னக்குன்னு ஒரு தனி பாணிய வெச்சிருந்தார் நம்ம பண்டராஸ்  
நம்ம ஊருல கெளதம் மேனன் சூர்யா மாறி அங்கயும் இவர தேத்தி விட ஒரு ஆளு 
அவரு பேரு அல்மொடவர் , காதல் காமடி அப்டின்னு வரைட்டி காட்டி மத்த  நடிகர் காதுல புக போக வெச்சவரு  அல்மொடவர்  கூட கொஞ்சம் படம் பண்ணிட்டுருந்தப்பவே அமெரிக்கா ல ஹாலிவுட் ல நடிக்க சான்சு கிடைச்சது அதிலிருந்து ஏறுமுகம் தான் இவருக்கு ஆனா பிரச்சின என்னானா இவருக்கு இங்கிலீஷு சுத்தமா வராது .....ரூம் போட்டு யோசிச்சி 
ஒலி வடிவுல இங்கிலீஷ மனப்பாடம் பண்ண சொன்னாங்க  
அதையும் பண்ணி வெற்றிகரமா மடோனா கிட்டயே பாராட்ட வாங்கினார் ...

(1992) ல The "Mambo Kings"
"Vampire Chronicles” (1994).
"Desperado” (1995).
The Mask of Zorro” (1998)
“Crazy in Alabama” in 1999
"The Legend of Zorro” (2005),
"Assassins" (1995)



இதெல்லாம் அவுரோட பெரிய வெற்றிப்படங்கள் 

3 தடவ கோல்டன் க்ளோப் அவார்டு ,
5 தடவ அல்மா அவார்டு(காதல் மன்னன் மாறி )  ,  
அப்புறமா ஆப்பிள் சிங்கம் அவார்டு எல்லாம் தங்கதுலையே வாங்கிருக்கார் 
இந்த மாறி 50 கும் மேல குவிச்சிருக்கார் நம்ம தல  


வர்கிட என்ன ஸ்பெஷல் தெரியுமா புள்ளைங்க பாத்தா அப்டியே சொக்கி விழற அளவுக்கு வசீகரம் ,பார்வையில வீரம் ,குறிப்பா கடின உழைப்பு எந்த வேலைய செஞ்சாலும் (ரோல்) கத்துகிட்டு தான் செய்வார் "மாஸ்க் ஆப் தி ஜார்ரோ" ல நிஜமான இரும்பு  கத்திய வெச்சி சொலட்டுவார் ........
இவர்கிட்ட நான் பாத்தது கெத்து ....செம மேன்லி 

இவர்  நம்ம  ஊரு  பக்கம்  வந்தா நல்லா வருவார் ஆனா அந்த ஊர் பேரு வெச்சி படம் எடுக்குறவர் கிட்ட கொஞ்சம் கஷ்டம் தான் உடனே ஸ்பெயின் அப்டின்னு டைட்டில வெச்சி இவர வெல்டிங் அடிக்க வுட்ருவாறு  ,அப்புறம் நான் சொல்லி அடிக்கறதுல மாம்போ , கத்தி  எடுத்தா ஜார்ரோ..... ,கிடார் வாசிச்சா தேச்பெரடோ..... நு 250 பக்கத்துக்கு சொன்ன டயலாகையே  திரும்ப மனப்பாடம் பண்ணு நு சொல்லுவார் 

அப்புறம் என் பேரு ஆண்டனி நு பத்து தடவ திரும்ப சொல்லி கழுத்து வலிக்கு ரெண்டு  லிட்டர் மன்னன்னைய வாங்கி உருவியும் விடுவார் ......ஜாக்ரத ......  




            ஜெயங்கொண்டான் வருவான்  ......

No comments:

Post a Comment

எப்பு...டி ...