Tuesday 15 February 2011

ஜெயம்கொண்டம்


கல்லூரியில் கம்ப்யூட்டர் ப்ராக்டிகல்ஸ் முடிஞ்சி viva கு மேடம் கேள்வி கேட்டாங்க உங்க ஊர்ல என்ன ஸ்பெஷல் நு 
அப்டி ஒன்னும் சொல்லிக்கிற அளவுக்கு இல்லையே நு நெனைச்சி 
க்ரைம் தன் மேடம் நு சொன்னேன் 


அப்டி என்ன க்ரைம் பண்ணுவாங்க -மேடம் 
கொலை ,கொள்ளை ,வழிப்பறி ,இப்டி எல்லாம் இருக்கு மேடம் கற்பழிப்பும் சேத்து-நான் 
ஓகே viva முடிஞ்சுது நீங்க போலாம் சீக்கிரம்.....
 அந்த viva ல நான் 2 வது மார்க் லாஸ்டுலேருந்து 


போய் சேந்த பஸ்டு நாள் P.D சார் வந்து யார்யாருக்கு என்ன விளையாட தெரியும் நு கேட்டார் 
எல்லாரும்  சொன்னாங்க நானும் சொன்னேன் கிரிக்கெட் ,கேரம் ,செஸ் ,டென்னிஸ் ,புட்பால் ,வாலிபால் ,ஹாக்கி நு 

உன்ன என்ன கேம்ஸ்  தெரியும் நு கேக்கல என்ன விளையாட தெரியும் நு கேட்டோம் -சார் 
இபோ சொன்ன எல்லாமே விளையாடுவேன் சார் -நான் 
நீ எந்த ஊர் -சார்
ஜெயம்கொண்டம் -நான் 

நீ அப்டி தான் இருப்பே உக்கார் நு சொல்லிட்டார் .....


ஒரு வாரத்துல சினிமாக்கு போனோம் நைட்டு லேட் ஆயிடுச்சி போலீஸ் காரன் கூபிட்டு எல்லா ஊரையும் கேட்டார் 
நான்    ஜெயம்கொண்டம் நு சொன்னதும் நீ மட்டும் வான்னு

என் அட்ரச கேட்டு நீ என்ன நக்சலைட்டா நு கேட்டு ஐ டி கார்ட புடுங்கிட்டார் 
அப்புறம் கால்ல விழுந்து வாங்கிட்டு வந்தோம் எல்லாரும் சேந்து 

இப்டி பல புகழ்களுக்கு சொந்தக்கார ஊர் தான் ஜெயம்கொண்டம்

எங்க ஊருக்கு இப்டி ஒரு ஆண்டி ஹீரோ ரோல் இருந்தாலும் 


பல சூப்பர் ஹீரோ ரோல் லாம் வெச்சிருக்கு எங்க ஊர் 
ஏற்கனவே இருக்கற வீட்ல குடி போறது ரொம்ப ஈசி 
நிலம் வாங்கி கஷ்டப்பட்டு நாமே செங்கல் செஞ்சி 
கட்டி குடிபோற சுகம் தனி 


அது போலதான் ரொம்ப பின் தங்கிய மாவட்டத்திலிருந்து 
(பாலைவனத்துல ஒரு நீரூற்றை போல )
ஒரு பெயர் சொல்ற அளவுக்கு வந்திருக்கு 


நிறைய படிச்சிருக்கற அதே போல பண்பாடும் மாறாத இளைஞர்கள் 
அதி காலையிலே கடமை செய்யும் குடும்ப விளக்குகள்
உள்ளதை கொடுத்து சந்தோஷப்படும் பணக்காரர்கள்  
இப்டி நிறைய .............
(கொஞ்சம் பக்கத்துல  கங்கை கொண்ட சோழபுரம் ,
அதிக நிலக்கரி இருக்கும் சிட்டி ,
தமிழ்நாட்லயே கரெக்டா தமிழ் பேசுற இடம் ) ..........


.........இதாங்க எங்க ஊரு(சோழர்களின் சொர்க்கம் ) .....
gangai gonda cholapuram temple

3 comments:

எப்பு...டி ...